நின்று போன 2-வதுதிருமணம் .. விரக்தியில் வில்லன் நடிகர்!


பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இவர் சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள்,வினோத் அக்கா சூண்டா, டா தடியா என அடுத்தடுத்த படத்தில், வில்லன், குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஜய் நடித்த பீஸ்ட், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டாடபுள் எக்ஸ் படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். 40 வயதான நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு தபீதா மேத்யூஸ் என்கிற மனைவியும் ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது நீண்ட நாள் தோழி தனுஜா என்கிற மாடல் அழகியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது குறித்த புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

ஷைன் டாம் சாக்கோ

இந்நிலையில் இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், சைன் டாம் சாக்கோ தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவிலிருந்து திடீரென நீக்கினார். இதனால்
இருவருக்கும் இடையேயான நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஷைன் டாம் சாக்கோ கூறுகையில், நான் இப்போது
சிங்கிளாக இருக்கிறேன். என்னதான் நான் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் கூட அந்த உறவை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை
எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள ஷைன் டாம் சாக்கோ மீண்டும் ‘டேட்டிங் ஆப்’ பக்கம் கவனத்தைத் திருப்பி பெண் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்

தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்வதிலும் அவர்களை கன்வின்ஸ் செய்வதிலும் நிறைய சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top