ஜப்பான்
நடிகர் கார்த்தியின் 25வது படமாக ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது . வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் கார்த்தியின் 25வது படவிழா மற்றும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து படத்தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு கூறுகையில்,” ஜப்பான் கார்த்தியின் 25 வது பட விழா மற்றும் இப்படத்தின் டினரலர் வெளியீட்டு விழாவையும் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்விழாவுக்கு கார்த்தியுடன் இணைந்து நடித்த நடிகர் நடிகைகள் அனைவரையும் அழைத்து இருக்கிறோம். இவ்விழா முற்றிலும் புதுமையாக இருக்கும்.ராஜு முருகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆக்சன் திரில்லர் என்றாலும் அதையும் தாண்டி படம் முழுவதும் கார்த்தியின் சட்டயர் காமெடி அதிரடியாக இருக்கும்.
இந்த மாதிரி நக்கல், நையாண்டி கலந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து நீண்ட நாட்களாகி விட்டதால், இதில் கார்த்தியின் ஜப்பான் கேரக்டர் ரசிகாகளால் பேசப்படும். மேலும் கார்த்தி ஏற்கனவே சாதார் படத்தில் முருகன் பாடல் ஒன்றை பாடியிருந்தாலும் இதில் அவர் பாடியுள்ள மெலடிப்பாடல் பெரிய அளவில் போப்படும்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்தி: கைதி-2ம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்கிறார்.