ஒவ்வொரு வருடமும் யூடியூப் அதிக பார்வையாளர்களைப் பெற்ற ‘சிறந்த 10 தமிழ் பாடல்களை யூடியூப் நிறுவனம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் வருடம் அதிக பார்வையாளர்களைப் பெற்ற தமிழ் பாடல்களை இப்போது காண்போம்.
1.ரஞ்சிதமே -வாரிசு
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் வரும் ‘ரஞ்சிதமே’ பாடல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.

2.கவாலா -ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வரும் ‘காவலா’ பாடல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
3.நான் ரெடி -லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ படத்தில் வரும் ‘நான் ரெடி தான்’ பாடல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
4.ஜிமிக்கி பொண்ணு -வாரிசு
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் வரும் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு தமன் இசை அமைத்துள்ளார்.
5.வா வாத்தி -வாத்தி
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூர்லி இயக்கத்தில் ‘வாத்தி படத்தில்’ வரும் ‘வா வாத்தி’ பாடல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

6.ஜூக்கும் -ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் வரும் ‘ஜூக்கும்‘ பாடல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
7.தீ தளபதி -வாரிசு
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் வரும் ‘தீ தளபதி’ பாடல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.
8.கட்டுமல்லி -விடுதலை -1
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘விடுதலை’ படத்தில் வரும் ‘காட்டு மல்லி’ பாடல் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு ‘இசைஞானி இளையராஜா’ இசையமைத்துள்ளார்.
9.சில்லா சில்லா -துணிவு
எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் வரும் ‘சில்லா சில்லா’ பாடல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
10.படாஸ்-லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த ‘லியோ’ படத்தில் வரும் படாஸ் பாடல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது’ இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்’
இந்த வருடத்தில் வெளியான பெரும்பாலான பெரிய திரைப்படங்களுக்கு அனிருத் சிறப்பாக இசையமைத்திருந்தார் மேலும் அவரது பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.