வடி கஞ்சி சூப்
1.சாதம் வடித்த கஞ்சி – 2 கப்
2.புளித்த மோர் – 1/2 கப்
3.இஞ்சி – 1 துண்டு
4.கறிவேப்பிலை – சிறிதளவு
5.உப்பு – தேவையான அளவு
6.வேக வைத்த காய்கறி கலவை – 1/4கப்
7.மல்லி தழை – சிறிதளவு
8.எண்ணை – 1 ஸ்பூன்

செய்முறை
இஞ்சியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி, வடித்த கஞ்சி, காய்கறிக் கலவை. அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு இறக்கிவைத்து, கடைந்த புளித்த மோரை அதனுடன் சேருங்கள் மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
பழைய காலத்தில் இது முக்கியமான உணவாக இருந்தது. உடனடியாக உடலுக்கு போஷாக்கு அளிப்பது. வயிற்று நோய்க்குச் சிறந்தது. பழைய வைத்திய நூற்களில் மிளகாய் இடம் பெறவில்லை. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மிளகாய் இந்தியாவிற்கு வந்தது. பழைய காலத்துச் சமையல்களில் எல்லாம் மிளகையே பயன்படுத்தி வந்தார்கள்.
திதிகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளை எடுத்துக்கொண்டால் அவை முழுக்க முழுக்க இந்தியக் காய்கறிகளே ஆகும். கோஸ், கேரட் போன்றவை கிடையாது. பின்பு ருசிக்காகத்தான் மிளகாய் பயன்படுத்தப்பட்டது. மிளகாயை விட மிளகு சிறந்தது.








