மீரா நந்தன்
தமிழ்த்திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வால்மீகி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மீராநந்தன்.இப்படத்தை தொடர்ந்து ஆதியுடன் இணைந்து அய்யனார் படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் அப்படியே மலையாளத்தில் தனது கவனத்தை திருப்பினார். இதற்கிடையே கடந்த சில வருடங்கள் புதிய படங்களில் நடிப்பதையும் நிறுத்தி இருந்தார். இந்நிலையில், நடிகை மீரா நந்தனுக்கு ஸ்ரீஜு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Also Read
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்ப டங்களை பார்த்த திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






